இந்த வருடம் ஜூலை மாதம் அதுருகிரியவில் வர்த்தகர் கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவருக்கும், காரின் சாரதிக்கும் உதவிய மற்றும் தங்குமிடத்தை வழங்கியமைக்காக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக  பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் காரின் சாரதியை பொலிஸார் நேற்று கைது செய்ததை அடுத்து, அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here