காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஜபாலியா ஏதிலிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 8 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட முகாமிற்கு முன்பாக உணவு கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இதனிடையே, காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் சுமார் 40,786 பேர் உயிரிழந்த நிலையில் 94,224 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








