பிக் பாஸ் சீசன் 8இன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து விஜய் டீவி சார்பில் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாலை 6 மணிக்கு தெரிவிக்கவுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கினார்.

தற்போது எட்டாவது சீசனுக்கு விஜய் டீவியும் பிக் பாஸ் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

நடிகர் கமல் இந்த சீசனை தொகுத்து வழங்க வில்லை என்று அறிவித்து விட்டதால் பெரும்பாலானோர் நடிகர் விஜய் சேதுபதிதான் எனக் கூறினாலும், எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்ற ஸ்டைலில் இயங்கி வரும் பிக் பாஸ் டீம், யாரைத் தேர்வு செய்துள்ளது என்பது குறித்து இன்று மாலை 6 மணிக்கு தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here