ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2024 செப்டம்பர் 1 முதல் இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முயற்சி தனிநபர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்வதற்கு அல்லது அபராதம் விதிக்கப்படாமல் அல்லது நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த விசேட ஏற்பாட்டுக்கு ஆதரவாக, டுபாயில் உள்ள துணைத் தூதரகம், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை நடத்தப்படும் வழக்கமான தூதரக சேவைகளுக்கு மேலதிகமாக, இலங்கையர்களுக்கு பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சிறப்பு தூதரக சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதேபோல், அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்புத் தூதரக ஆதரவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது.

மேலும் உதவிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கைப் பிரஜைகள் நியமிக்கப்பட்ட நேரங்களில் டுபாயில் உள்ள துணைத் தூதரகத்திற்குச் செல்லுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள் அல்லது பின்வரும் இலக்கங்கள் மூலமாக துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • ⁠ ⁠Email: consular.dubai@mfa.gov.lk
  • தொலைபேசி: +971 4 611 55 00 மற்றும் +971 4 611 55 55

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டப்பூர்வ வதிவிட அனுமதியின்றி வாழும் இலங்கையர்களின் உறவினர்கள் தங்களின் வதிவிட நிலையைச் சரிசெய்வதற்கு அல்லது வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் இலங்கைக்குத் திரும்புவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி, இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் துணைத் தூதரகம் கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here