தருமபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை வண்ணாத்தி ஆறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் பல அடி தாளத்திற்கு தோண்டப்பட்டு அப்பகுதியில் இருந்து மணல்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேலைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்று 06.09.2024 தருமபுர போலீசார் அப்பகுதியில் சென்று அங்கு சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூ பூக்கும் அதிகமான மணலினை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள மணலினை அங்கிருந்து தருமபுர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








