பொகவந்தலாவ – கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் ஐவர் தோட்ட மருத்துவமனையிலும் ஏனைய இருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here