அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) இரவு இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.








