புஞ்சிஹல்மில்லேவ பிரதேசத்தில் வயல்வெளிக்குள் புகுந்த யானைகளை விரட்ட முற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹடகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயான ஆர்.டபிள்யூ.எம்.ஜி.அபேரத்ன என்ற 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இ.எஸ்.அபேசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








