பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட தரப்பினர் தம்புள்ளையில் தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததையடுத்து, காவல்துறையினரால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் தம்புள்ளை நகரில் நேற்றைய தினம் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் நூறுக்கும் அதிகமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
இந்த செயற்பாடு தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்து காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







