கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூரியர் சேவை மூலம் அனுப்பபட்ட பொதிகளில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டுடிப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் பொகோட்டாவிலிருந்து கம்பஹா கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பொதிகளிலிருந்த மின் சாதனத்தில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here