தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் போது கொலை செய்யப்பட்ட மனைவியின் சகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







