பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, சீருடைக் கொடுப்பனவுடன், 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபா வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here