திவுலப்பிட்டி பிரதேசத்தில் விற்பனை செய்வதற்கு தயாராகவிருந்த 17 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 220 கிராம் அம்பர் தொகை  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று  (16.09) கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திவுலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹென்பிட்டி மற்றும் வாதுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here