சர்வதேச மனித உரிமைகள் அமைப்புடன், சர்வதேச பௌத்த சம்மேளனம் இணைந்து நடத்திய கௌரவிப்பு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
வானொலி அறிவிப்பாளரும், எழுத்தாளரும், ஆசிரியருமான பாணந்துறை லைலா அக்ஷியா மொஹிடீன் தேசபந்து, லங்கா புத்திர, மக்கள் ஒளி ஆகிய பட்டங்களை பிரதம அதிதியான ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரியவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.







