நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் நேற்று (18) காலை நடைபெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







