பங்களாதேஷில் மாணவர் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே சிறைச்சாலைகளில் இருந்து குற்றவியல் வழக்குகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்ட கொடிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில் சுமார் 900 கைதிகள் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷெய்க் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டில் இருந்து வெளியேறிச் சென்ற பின் அவாமி லீக் அரசின் ஆட்சி கவிழ்ந்தபோதே 17 சிறைச்சாலைகளில் வன்முறை வெடித்ததோடு, அப்போது 2000 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இவர்களில் 1100 பேர் வரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் பங்களாதேஷ் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன கைதிகளைப் பிடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை தொடர்ந்து செயற்படுத்தப்பட்டபோதும் தற்போது வரை அது வெற்றி அளிக்கவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
மேலும் காணாமல்போயிருக்கும் கைதிகளை பிடிப்பதற்கு பொதுமக்கள் உதவியை எதிர்பார்ப்பதாக ஊடக சந்திப்பொன்றில் கலந்துரையாற்றிய சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை ஆணையாளர் பிரகேடியர் ஜெனரல் செயித் ஹுஸைன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








