Sunday, May 10, 2026
No menu items!

சிறைச்சாலை ஆணையாளர்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில்...

துமிந்த சில்வாவுக்கு சிறையில் விசேட வசதிகள் வழங்கப்படாது – சிறைச்சாலை ஆணையாளர்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், சிறைச்சாலையின் வைத்தியசாலையில் உள்ள கைதிகளுக்கு வெளியிலிருந்து உணவுகளை வழங்குதல் மற்றும் விசேட...

கைதிக்கு சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவி கொடுக்க முன்றவர் கைது..!

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவியை கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சந்தேக நபர் புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு சென்ற போது சிறைச்சாலை...

தொடர்ந்தும் மாயமான முறையில் சிறையிலிருந்து தப்பிச் சென்று வெளியில் நடமாடும் 900 கைதிகள்….!

பங்களாதேஷில் மாணவர் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே சிறைச்சாலைகளில் இருந்து குற்றவியல் வழக்குகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்ட கொடிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில்  சுமார் 900 கைதிகள் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷெய்க் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டில் இருந்து வெளியேறிச் சென்ற...

விடுதலை செய்யப்பட்ட எமில் ரஞ்சன் லமாஹேவா………!

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்பட்ட மரண தண்டணையிலிருந்து விடுவிக்க உயர் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. தண்டணைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி லமாஹேவா...

சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதாள உலகக்குழுத்தலைவர் விடுத்துள்ள அச்சுறுத்தல்…!

கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பூஸா சிறைச்சாலை சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக குறித்த அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றவாளிகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸ் விசேட...
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img