அமெரிக்காவின் அலபாமா மாகாணம், பர்மிங்கம் நகரிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் நேற்று (22) துப்பக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடுதியின் அருகில் பலர் நின்று கொண்டிருந்த வேளை திடீரென அங்கு காரில் வந்த கும்பலொன்று அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
இச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததோடு, 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன் மேலும் துப்பாக்கிச் சூடு நடாத்தியவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








