இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்தகட்டமாக முன்னெடுக்கக்கூடிய நகர்வுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்ட கட்சி உறுப்பினர்கள் தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்படும் எனக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here