அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதவிர, சுயேட்சை குழுக்கள் சார்பிலும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒரு கட்சியின் சார்பில் மாவட்ட ரீதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.

விகிதாசார முறைமையூடாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here