முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும்.

“அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படையினரை வரவழைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இது முற்றிலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் வழமையான வர்த்தமானியாகும். இருப்பினும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,” என்றார்.

இலங்கைக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான அச்சுறுத்தல்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்பத் துயகோந்த, பொதுமக்கள் தற்போது பல வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்தார்.

“ஜனாதிபதியின் தலைமையின் கீழ், இந்த அச்சுறுத்தல்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தாத வகையில் எதிர்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

முப்படைகளை பலப்படுத்துவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் எதிர்பார்ப்பதாக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா தெரிவித்ததுடன், “தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி உட்பட அனைத்து துறைகளிலும் முப்படைகளை அபிவிருத்தி செய்ய நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here