விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இந்தக் கைதுகளை உறுதிசெய்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை மற்றும் சிறைத்துறை சார்பில் தனித்தனி விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, ஞாயிற்றுக்கிழமை (03) சிறைக்குள் நடைபெற்ற சிரமதான பணியின்போது தப்பிச் செல்ல முயன்றதாகவும், சிறை அதிகாரிகளால் மீண்டும் பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உறவினர்கள், அவர் இறப்பதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்களை பொரல்லை பொலிசார் கைது செய்து, இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here