ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 ஆம் திகதிகளில் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் நேற்று (30.09.2024) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் புதிய பொருளாதார குழுவை தூதுக்குழு சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here