ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா இன்று (01.10.2024) அந்நாட்டு பாராளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து, அவர் நாட்டின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தாரென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here