முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, இலங்கை தொழிலதிபர் திலித் ஜெயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
ம.ஜ.த.வில் இணைந்துகொண்ட தஹாம் சிறிசேன பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பில் உள்ள ம.ஜ.த.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற தஹாம் சிறிசேன, கட்சியில் இணைவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.








