மைத்திரிபால சிறிசேன
உள்நாட்டுச்செய்திகள்
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் – மீண்டும் திறந்து ஆறு ஆண்டு நிறைவு!!
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
முன்னாள் வட மாகாண ஆளுநர் டாக்டர் சுரேன் ராகவனின் முயற்சிகளும், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளும் இணைந்து, 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி பலாலி விமான நிலையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளில், மொத்தம்...
இலங்கை அரசியல்
உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், புதிய சட்டமூலத்தால் இச்சலுகை அவர்களுக்கு இழக்கப்பட்டுள்ளது.
இதன்படி,...
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் ஜனாதிபதிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்..!!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கூறியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தனது கடமை தவறிய குற்றச்சாட்டில் முன்னாள்...
புதிய செய்திகள்
மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் கலந்துரையாடல்!
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சிக்குப் பெரும்பான்மையுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் சமன்...
Top
உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள மைத்திரிபால சிறிசேன!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின்படி முன்னாள் ஜனாதிபதி இந்த முறையில் வந்துள்ளார்.
ராயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்யக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உள்நாட்டுச்செய்திகள்
குண்டுவெடிப்பு தாக்குதல் – உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த மைத்திரி..!
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை...
உள்நாட்டுச்செய்திகள்
ஜே.வி.பி உடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை : மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் – சிறிகாந்தா தெரிவிப்பு!
தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே எம்.சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது மக்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
CIDயில் மைத்திரி முன்னிலை..!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
புதிய செய்திகள்
CID முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன!
ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார்.
அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசியல்
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திக்க முடிவு..!
நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் வருகின்ற திங்கட்கிழமை (07) பிற்பகல் கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்காக சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இவ்வாறு சந்திக்க உள்ளனர்.
மேலும், இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரிகள் மற்றும் அதற்கு பதிலளிக்கும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


