இலங்கையின் மூத்த நடிகர் கமல் அதரராச்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தலைமையிலான ‘தேவன பரபுர’ கட்சியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தான் போட்டியிடப் போவதாக ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தினார். இவர் இதற்கு முன்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here