அனுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏகநாயக்க தனது 76 ஆவது வயதில் காலமானார்.

அநுராதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அரசியல்வாதி நேற்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரைப் பராமரித்து வந்தவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் அவர் இறக்கும் போது வீட்டில் தனியாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டபிள்யூ.பி.ஏக்கநாயக்கவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here