ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொலைகாணொளி ஊடாக நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கும் யு.எஸ்.எய்ட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்குத் தங்களது அமைப்பின் முழு ஆதரவு வழங்கப்படும் என சமந்தா பவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here