எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதனை இன்று சனிக்கிழமை (12.10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதியின் பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








