சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் (14) மற்றும் நாளையும் (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றும் மற்றும் நாளையதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும், நாளையதினமும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here