மகளிர் இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய இலங்கை மகளிர் அணி நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற குறித்த தொடரின் இலங்கை அணி பங்கு பற்றிய 4 போட்டிகளிலும், தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்தநிலையில் அடைந்த தோல்விகளுக்கு அணியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை மகளிர் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
பல எதிர்பார்ப்புகளுடன் மகளிர் உலக கிண்ண தொடருக்காகச் சென்றோம்.
கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடினோம்.
இந்த தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற 2 பயிற்சி போட்டிகளிலும் வென்றோம்.
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற 1ஆவது தோல்வியின் பின்னர் இடம்பெற்ற தொடரின் ஏனைய அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்றோம்.
இதற்கு பலவீனமே காரணமாகும்.
அனைவரும் இதற்குப் பொறுப்பு கூற வேண்டும்.
பிரதானமாக நான் இந்த தொடரில் சிறப்பாக ஆடவில்லை.
இந்த விடயம் தொடர்பில் ஒரு அணியாக நாம் மீளாய்வு செய்ய வேண்டும்.
இந்த தோல்விகள், எமக்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும்.
ஒற்றுமையாக விளையாடியே ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றினோம்.
அணியில் தற்போதும் ஒற்றுமை உள்ளது.
மகளிர் இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில் அனைவரும் திறமையை வெளிக்காட்டத் தவறியுள்ளோம்.
இதன்காரணமாகவே நாம் தோல்விகளைச் சந்தித்துள்ளோம் என இலங்கை மகளிர் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.







