போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றது.
விசாரணைகளில், சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில் உணவுக்கு பணம் செலுத்த போலி 5,000 நாணயத்தாளை பயன்படுத்த முயன்றமை தெரியவந்தது.
உணவக உரிமையாளர் பணத்தில் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.







