சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 04 மலேசிய ஆண்கள், 03 எத்தியோப்பியா ஆண்கள் மற்றும் ஒரு பெண், ஒரு கென்யா பெண் மற்றும் ஒரு சீன ஆடவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் வசம் இருந்த 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here