நிதி மோசடி
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கைக்கு தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள இந்தியா!
நிதி மோசடி, நிதி குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு ஆகியவற்றை தடுக்க தேவையான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இது தொடர்பாக, நிதிச் செயற்பாட்டுக் குழு (Financial Action Task Force) தலைமையிலான ஒரு உயர்மட்ட இந்தியக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.
விழிப்புணர்வூட்டல், திறனாக்கல் மற்றும் தொழில்நுட்ப உதவி...
புதிய செய்திகள்
போலி விளம்பரங்கள் மூலம் சமூக ஊடகங்களில் மோசடி; ஒருவர் கைது!
விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
நிதி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல காவல் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (மே 28) சந்தேக நபர்...
உள்நாட்டுச்செய்திகள்
நிதி மோசடி தொடர்பில் அருண் தம்பிமுத்து கைது..!
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
புதிய செய்திகள்
பிரமிட் திட்டத்தில் பண மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்!
குருநாகல் பகுதியில் சட்டவிரோத பிரமிட் திட்டத்தை முன்னெடுத்து வைப்பாளர்களின் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த இருவரையும் எதிர்வரும் 13...
புதிய செய்திகள்
ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை!
ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான 162 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் அண்மையில் காணாமல் போனமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குக் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளுக்கு உத்தரவுகள் தேவைப்படின், அவற்றை மனு ஒன்றின் ஊடாக கோருமாறும், அவர்...
புதிய செய்திகள்
நீதிமன்ற உத்தரவை பெற்ற திசர நாணயக்கார..!
நிதி மோசடி வழக்கு தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (06) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகள்
அதிகரித்த நிதி மோசடி-பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!
நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நிதி மோசடி முறைப்பாடுகள் கூர்மையாக அதிகரித்துள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றே மீண்டும் பொதுமக்களிடம் பாரியளவு மோசடி செய்வதாகவும் கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SLCERT) பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கணினி அவசரகால தயார்நிலை குழுவிற்கு மோசடி தொடர்பாக 25 சதவீதத்துக்கும் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே,...
Top
முன்னாள் எம்.பி திலீபனுக்கு பிணை..!
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர், இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை சரீரப்பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரிக்கை..!
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி WhatsApp இணைப்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பணியகத்தின்...
இலங்கை அரசியல்
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி – கட்சியின் யாழ். அமைப்பாளர் எச்சரிக்கை..!
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம் எனவும் பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


