இன்றைய சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டது.

இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதியின் செயலாளருக்கு கொடியை அணிவித்தார்.

கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதுடன் அவர்களின் நலனுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபை உறுப்பினர்களுடன் சமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், அவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தியதுடன், எதிர்காலத்தில் அவற்றுக்கு தீர்வு வழங்குவது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here