கொள்ளுப்பிட்டி, சமகி மாவத்தையில் உள்ள சீன பொருட்களை விற்பனை செய்யும் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பத்தாயிரம் சீன சிகரெட்டுகள் இன்று (18.10) கைப்பற்றப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கலால் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சிகரெட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்து வைத்திருந்த 59 வயதுடைய சீன நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here