ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வன்னி மாவட்ட முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண மாவட்ட பெண் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் ஆகியோர் கலந்துரையாடினர்.

இதன்போது எதிர்வரும் தேர்தலி்ல் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்களின் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும். என்பது பற்றி கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் முன்னாள் போராளிகள் யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here