கண்டி – அனிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொகுசு ரக மகிழுந்து ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு வாகனங்களும் நேற்றைய தினம் (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டி – அனிவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் வாகனத் தரிப்பிடத்தை சோதனையிட்ட போது, இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த சொகுசு ரக மகிழுந்தும் ஜீப் ரக வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த 2 வாகனங்கள் தொடர்பான சட்ட ஆவணங்களை குறித்த வீட்டில் இருந்தவர்கள் சமர்பிக்காதமையினால், அந்த வாகனங்களை காவல்துறை பொறுப்பபேற்றுள்ளது.
இந்தநிலையில், குறித்த சொகுசு ரக மகிழுந்து ஒன்றும் ஜீப் ரக வாகனமும் கண்டி – மஹிய்யாவ பகுதியில் மகிழுந்து விற்பனை நிலையத்தை நடத்தும் ஒருவருக்கு சொந்தமானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த காலங்களில் துறைமுக அதிகார சபையில் உயர் பதவியை வகித்துள்ளதுடன், அரசியல்வாதி ஒருவருடன் நெருங்கிய நண்பராகவும் காணப்பட்டுள்ளார்.








