பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மங்கேனி பகுதியில் இன்று 22.10.2024 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக கப் ரக வாகனம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளி பலத்த சேதத்துக்கு உள்ளானது.
வாகன சாரதி மயிரிழையில் உயிர்தப்பினார். இச்சம்பவம் பனை தர்மங்களில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










