மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
பாடசாலை விட்டு மாணவி வீடு செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதான வீதியால் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







