எகிப்திலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தரைக்கடல் வழியாக நேற்று (29) லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளதுடன் அங்கு வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நபரொருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்த 12 அகதிகளின் உடல்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக லிபியா அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here