Wednesday, November 18, 2026
No menu items!

கடற்படையினர்

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் இன்று (நவம்பர் 3) காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று படகுகளில் எல்லை தாண்டி வந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற...

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி – 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில், எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 14 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளரின் விளக்கத்தின்படி, தலைமன்னாருக்கு வடக்கே இடம்பெற்ற சம்பவத்தில் 5 பேரும், பத்தலங்குண்டு பகுதியில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் வந்திருந்த இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில், கடந்த...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும்   31  திகதி வரை      விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட  நேற்று (17) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மற்றும் இம்மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல்...

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது!

காங்கேசன்துறை கடற்கரையில் கேரள கஞ்சாவுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படைத் தள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு  படகுகளை சோதனையிட்டபோது 8 பைகளில் 147 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள்...

முடிவுக்கு வந்த இராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கள் மீனவர்களை விடுவிக்கக் கோரி தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை அதிகரிக்கப்படும் என்று இந்திய முதலமைச்சர் எம்.கே. கே. ஸ்டாலினின் வாக்குறுதி அளித்துள்ளார். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும்...

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையத்தினை அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள்...

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை; மு.க ஸ்டாலின்!

இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல்...

காணாமல் போன வயோதிபர் கடற்பரப்பில் சடலமாக மீட்பு..!

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை (30.12.2024) காலை மன்னார் பொலிஸார் மீட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59)...

வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நபர் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக 26.11.2024 அன்று பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்தியமேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று  அடையாளம் காணப்படவில்லை.பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம்...
- Advertisement -spot_img

Latest News

தாய்லாந்து, இலங்கை இடையிலான விசாவுக்கு விலக்கு

தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஒப்புதல் அளித்ததாக...
- Advertisement -spot_img