மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சதொசவின் கூற்றுப்படி, பச்சைப்பயறு கிலோ ஒன்றின் விலை 850 ரூபாவிலிருந்து 51 ரூபா குறைக்கப்பட்டு  799 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை போஞ்சி 900லிருந்து 20 ரூபா குறைக்கப்பட்டு 880 ரூபாவாகவும்,. வெள்ளைச் சீனி விலை 248 ரூபாவிலிருந்து 5 ரூபா குறைக்கப்பட்டு 243 ரூபாவாக விற்பனைசெய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அனைத்து சதொசவிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here