பதுளை, செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 576,500 மில்லிலீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெர்ல்களையும் கைப்பற்றியுள்ளதுடன் அப்பகுதியில் மிக நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here