சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டி மத்திய சந்தையில் வைத்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 மற்றும் 48 வயதுடைய இரு பெண்களும் சீன பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






