தேர்தல் மற்றும் வார இறுதி விடுமுறை நிறைவடைந்து பணியிடங்களுக்குத் திரும்புபவர்களின் வசதி கருதி 7 விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் இயங்கும் வழமையான தொடருந்துகளுக்கு மேலதிகமாக விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here