Sunday, August 2, 2026
No menu items!

தொடருந்து சேவை

வடக்கு மார்க்க தொடருந்து சேவையில் புதிய நேர மாற்றம்!

வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவையின் பயண நேரத்தில் இன்று முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரை, வார இறுதி நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த சொகுசு கடுகதி தொடருந்து சேவையானது, இன்று முதல் நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு...

களனி தொடருந்து சேவையில் பாதிப்பு!

களனி மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிவந்தல தொடருந்து நிலையத்திற்கு அருகில், அவிசாவளையிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தொடருந்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கடலோர தொடருந்து சேவையில் ஏற்பட்ட தடங்கல்!

கடலோர தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து தண்டவாளத்தின் உடைவு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்ட  தொடருந்து சேவை!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக...

தொடருந்து திணைக்களத்தின் புதிய தீர்மானம்..!

சுற்றுலாத் துறையையும் நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக தொடருந்து திணைக்களம் மேலதிகமாக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மலைநாட்டு தொடருந்து மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்து வருவதாலும், அதன் வலுவான ஈர்ப்பு மற்றும் அந்த பயணத்திற்கான அதிக தேவை காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும்...

தொடருந்து சேவையில் தாமதம்..!

கரையோர மார்க்கத்தில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தெஹிவளைக்கும் கல்கிசைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்ததன் காரணமாக இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சேவைகளில் தாமதம் !

சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. <!-- -->

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்று சீதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், அலுவலக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று இன்று (29) தடம் புரண்டுள்ளது. அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மட்டுப்படுத்தப்பட்டுள்ள அஞ்சல் தொடருந்து சேவை !

சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img