இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கலாவாவிக்கு அதிகளவில் நீர் விடுவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயாவை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், களனி ஆற்றின் பெரும்பாலான நீரேந்தும் பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்துள்ளதன் காரணமாக, அதன் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் களனி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் நிலவுகிறது.

இதன்காரணமாக குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்களும், அந்த வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் அதிக கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் 17 மாவட்டங்களில் 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here