இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக புகையிரத பாதையின் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று இரவு கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை வரையான இரவு நேர அஞ்சல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மோசமான காலநிலை காரணமாக மலையக புகையிரத பாதையில் பல்வேறு அனர்த்த சம்பவங்கள் பதிவாகியதன் காரணமாகவே இந்த ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்றும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







